திருமணம் செய்வதாய் ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை : கொடூர காமுகன் போக்சோவில் கைது

By Irumporai May 24, 2022 10:31 AM GMT
Report

திருப்பூர் அருகே 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும், காங்கேயம் மருதூர் பகுதியை சேர்ந்த முகேஷ்குமார்(19) என்ற இளைஞரும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி முகேஷ்குமார் கடத்திச் சென்றுள்ளார் .

திருமணம் செய்வதாய் ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை  : கொடூர காமுகன் போக்சோவில் கைது | Girl Sexually Harassed Near Tiruppur Youth

சிறுமி மாயமானதால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில் முகேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, முகேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.