மளிகை பொருள் வாங்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : கடை உரிமையாளர் போக்சோவில் கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மளிகைக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் சாமுவேல் (43). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, இவரது கடைக்கு பொருட்கள் வாங்க அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.
அப்போது, சிறுமிக்கு, கனகராஜ் சாமுவேல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
போக்சோவில் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் கனகராஜ் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.