சென்னை - பெங்களூரு போட்டியில் நடைபெற்ற காதல் சம்பவம் - வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை - பெங்களூரு அணிக்கு இடையிலான போட்யின் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.
மகாராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூபிளெசிஸ் 38, விராட் கோலி 30, லோம்ரர் 42 ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக தீக்ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் - கான்வே ஜோடி சிறப்பான தொடக்க தந்தனர். கான்வே 56, மொயீன் அலி 34, கெய்க்வாட் 28 ரன்களும் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
— Patidarfan (@patidarfan) May 4, 2022
இதனிடையே மைதானத்தில் காதல் ஜோடிகள் தங்களது காதலை தெரிவிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சிசனில் சென்னை அணி வீரர் தீபக் சாஹரே இப்படி தான் தன் காதலை தோழிக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் வித்தியாசமான காதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. வழக்கமாக ஆண்கள் தான் பெண்களுக்கு காதலை சொல்லும் சம்பவம் நடைபெற்றது. ஆனால் இம்முறை வித்தியாசமாக ஒரு பெண் திடீரென்று ஒரு கால் முட்டி போட்டு மோதிரத்தை நீட்டி தனது ஆண் நண்பருக்கு காதலை தெரிவித்தார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத அந்த பையன், அதற்கு யெஸ் என்று கூறி காதலை ஏற்று கொண்டார். இதனை மற்ற பார்வையாளர்களும் கொண்டாடினர்.