வாக்களிக்க சென்ற இளம்பெண் தலை நசுங்கி மரணம்
வேலூரில் வாக்களிக்கச் சென்ற இளம்பெண் அரசு பஸ்சில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காலை 11 மணிநேர நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் நீண்டநேரமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூரில் வாக்களிக்க சென்ற போது, இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தீபா தனது தாயுடன் மோடிகுப்பம் கிராமத்தில் வாக்குபதிவு செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.