ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மாயம் : சோகத்தில் குடும்பத்தினர்

By Irumporai Dec 20, 2022 09:46 AM GMT
Report

கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்த பெண் மாயமானது தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஈஷாயோகா மையம்

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிக்குமார். பனியன் நிறுவனத்தில் தரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஶ்ரீ (34). இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

இவர்களுக்கு 11 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ சைலன்ஸ் என்ற யோகா பயிற்சி ஈசா யோகா மையத்தில் மேற்கொண்டுள்ளார்.   

இந்நிலையில் மற்றொரு பயிற்சிக்காக கடந்த 11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்திற்கு வந்துள்ளார்.

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மாயம் : சோகத்தில் குடும்பத்தினர் | Girl Missing Isha Yoga Center

நேற்றுடன் பயிற்சி முடிவடைந்ததால் அவரை அழைத்துச் செல்ல மீண்டும் அவரது கணவர் வந்து பார்த்த போது, அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை, பழனிக்குமார் உள்ளே சென்று பார்த்த போது அவர் ஈசா யோகா மையத்தில் இல்லாத தெரியவந்தது.

பயிற்சிக்கு சென்ற பெண் மாயம்

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுபஶ்ரீ காலையிலேயே வெளியே சென்ற சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. மேலும் அவர் கால் டாக்ஸில் லிப்ட் கேட்டு செம்மேடு சென்றது தெரியவந்தது.

ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் கணவர் பழனிக்குமார் கோவை ஆலந்துறை போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சுபஶ்ரீயை தேடி வருகின்றனர்