சிறுமி கடத்தல் - உறவினர்களை அந்தரத்தில் தொங்க விட்ட கொடூரம்!! பதைபதைக்கும் வீடியோ!
உத்திரபிரதேசத்தில் ஒரு பெண்ணை கடத்தி சென்றவரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து அந்தரத்தில் தொங்க விட்ட கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் ரூப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடத்தி சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், கடத்தி சென்ற இளைஞரின் குடும்ப உறுப்பினர்களை மரத்தில் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களை பல மணி நேரம் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீடியோவில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.