ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சென்னையில் தொடரும் கொடூரம்

Chennai Sexual harassment
By Karthikraja Feb 05, 2025 07:45 AM GMT
Report

 ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை மாதாவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம்(03.02.2025) இரவு சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து மாதாவரம் செல்ல பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

பாலியல் தொல்லை

அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தானும் அங்கு தான் செல்வதாக கூறி அழைத்துள்ளார். அந்த பெண் வர மறுத்த நிலையில், வலுக்கட்டாயமாக அவரையும் அவரது உடமைகளை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அதன் பின்னர் செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் தனது இரு நண்பர்களுக்கு போன் செய்து அழைத்து, வண்டலூர் அருகே இருவரையும் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். 

பாலியல் தொல்லை

இருவரும் கத்தி முனையில் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டத்தை அந்த சாலையில் சென்றவர்கள் பார்த்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தனர். 

அண்ணாமலை கண்டனம் 

அதற்குள் சிறுமியை நெற்குன்றம் பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவில் வந்த மூவரும் தப்பியோடிவிட்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.  

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை ஒரு சர்வ சாதாரணமாவிட்டது. நமது சகோதரிகளுக்கு பாதுகாப்பான தெருக்களை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன்பாக இன்னும் எத்தனை பேரை காவு கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.