சாலையில் நடந்த பாலியல் வன்கொடுமை - தடுக்காமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்
சாலையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பட்டப்பகலில் சாலையில் வைத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் அதை பொதுமக்கள் தடுக்க முயலாமல் வீடியோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கோவில் நகரமான உஜ்ஜைனியில் உள்ள அகர் நாகா பகுதியில் கடந்த புதன்கிழமை லோகேஷ் என்ற இளைஞர், பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளார்.
வீடியோ எடுத்த மக்கள்
இதன் பின் பட்டப்பகலில், மக்கள் அதிகம் செல்லும் சாலை ஓரம் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்பொழுது அங்கிருந்த பொது மக்கள் அதை தடுக்காமல் கடந்து சென்றுள்ளனர். சிலர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
போதை தெளிந்த பெண் அந்த பெண், காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பது செய்த மத்திய பிரதேச காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது.