Sunday, Jul 13, 2025

காதலனை நிர்வாணமாக்கி, காதலிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூரம்!

Sexual harassment Maharashtra Crime
By Sumathi 2 years ago
Report

இளம்பெண்ணை, காதலன் முன்னிலையில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதல் ஜோடி

மகாராஷ்டிரா, ஜிவ்தானி என்ற கோவில் பகுதியில் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு மது அருந்த வந்த தீரஜ் சோனி (25), லட்சுமண் ஷிண்டே(22) என்பவர்கள் இவர்களை கவனித்து செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

காதலனை நிர்வாணமாக்கி, காதலிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கொடூரம்! | Girl Gang Raped By Tying Her Boyfriend 2 Youths

மேலும், அதனை அவர்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கையில் பணம் இல்லாததால் நண்பரிடம் கூகுள் பே மூலம் ரூ.500 அனுப்புமாறு கேட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

அப்போது, காதலன் அவர்களில் ஒரு இளைஞரை அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிபோட்டுவிட்டு, பெண்ணை வேறு பகுதிக்கு கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன்பின் பெண் தப்பித்து வீடு சென்றுள்ளார். இதற்கிடையில் காதலன் கட்டை அவிழ்த்து அங்குள்ளவர்களிடம் காதலியை காப்பாற்ற கேட்டுள்ளார். இதனை யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில், காவல்துறையினர் தகவலறிந்து வந்து விசாரித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இளைஞர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் பெண்ணின் வீடு சென்று வாக்குமூலம் பெற்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.