லவ் டுடே; செல்போனை மாற்றி மாட்டிக்கொண்ட காதலன் - கல்யாணத்தை நிறுத்திய காதலி!
செல்போன்களை மாற்றிக்கொண்ட காதலர்களின் திருமணம் நின்றுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.
லவ் டுடே
சேலம், பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்(24). இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரை காதலித்து வந்த நிலையில்
இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சியம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அரவிந்தும் அவரது காதலியும் ஒருவருக்கொருவர் செல்போனை மாற்றிக்கொண்டுள்ளனர்.
சிக்கிய காதலன்
இந்நிலையில், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அரவிந்த் காதலிக்கும் நோக்கில் பேசி வீடியோ காலில் மாணவியை அரை நிர்வாணமாக நிற்க சொல்லி அதனை செல்போனில் பதிவு செய்து இருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காதலி புகாரளித்துள்ளார்.
அதன்படி, போலீஸார் அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.மேலும், காதலி தனது திருமணத்தை நிறுத்திட கோரி பெற்றோரிடம் வலியுறுத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.