அம்மாவுக்கு சொல்லிட்டு இளம்பெண் எடுத்த முடிவு - சில மணி நேரத்தில் விபரீதம்!
குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
குடும்ப பிரச்சினை
விருதுநகர், கீழமறவன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வசரண். இவரது மனைவி ரேஷ்மா. செல்வசரண் டெம்போ டிரைவராக உள்ளார். திருமணமானதில் இருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளது.

இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அழுதுகொண்டேயிருந்தார்.
இளம்பெண் தற்கொலை
இறுதியில் ரேஷ்மா தற்கொலை செய்ய முடிவு செய்து அம்மாவுக்கு போன் செய்த அவர், வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.

உடனே தகவலின் பேரில், உறவினர்கள் ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்காததால், கதவை உடைத்து பார்த்ததில், ரேஷ்மா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
பின் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.