ரயில்வே பிளாட்பாரத்தில் குத்தாட்டம் போடும் இளம்பெண் - வைரலாகும் வீடியோ

Kolkata latestgirldance
By Petchi Avudaiappan Oct 17, 2021 04:15 PM GMT
Report

 கொல்கத்தாவில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த நடன ஆசிரியை சஹேலி ருத்ரா என்பவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி நடனம் ஆடும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் அங்குள்ள ரயில் நிலைய நடைமேடை ஒன்றில் திடீரென பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்த திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு ரீமிக்ஸ் குத்தாட்டம் போட்டார். இதனை சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அதேசமயம் சஹேலியில் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.