காதலனுடன் ஊர் சுற்ற இடையூறு - பாலியல் புகாரில் அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பிய கொடூர தங்கை
மும்பையில் காதலனுடன் ஊர் சுற்றுவதற்கு இடையூறாக இருந்த சகோதரரை தங்கையே பாலியல் புகாரில் ஜெயிலுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் காதலனுடன் ஊர் சுற்றுவதை கடுமையாக கண்டித்த அண்ணனை பழிவாங்க நினைத்திருக்கிறார். இதனால் கூட பிறந்த அண்ணன் என்றும் பாராமல் அவர் மீது போலீசில் பாலியல் புகார் அளித்து கதறியுள்ளார்.
இவரின் வார்த்தையை கேட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது சகோதரரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகனை வெளியில் எடுக்க அவரது பெற்றோரோ சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுப்படி சகோதரிக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை கண்டித்து அவரது சகோதரரை சிறையில் இருந்து விடுவித்தனர்.