ஆபாச சாட்டிங்; 8 ஆண்களை திருமணம் செய்து அலறவிட்ட பெண் - பணத்தை சுருட்டி ஓட்டம்!
ஆபாச சாட்டிங் செய்து 8 ஆண்களை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் வலை
ரஷீதா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் போலிக்கணக்கை உருவாக்கி அதிலிருந்து சேலம் தாரமங்கலத்தைச் சேர்ந்த பைனான்சியர் மூர்த்தி என்பவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் கடந்த மார்ச் மாதம் அவரை திருமணம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அவர் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். மூர்த்தி வீட்டில் வந்து பார்க்கையில் ஒன்றரை லட்ச ரூபாய் பணமும் 5 சவரன் நகையையும் ரஷீதா எடுத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மூர்த்தி தோலாசம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
8 பேருடன் திருமணம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது ரஷீதா நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் இதற்கு முன்னர் கேரளா,கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் உள்ள 8 பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கோவை துடியலூரில் இவர் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் இன்ஸ்டாங்க்ராமில் பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.