மருத்துவமனைக்குள் புகுந்து பெண் படுகொலை - நண்பர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணை முன்னாள் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொச்சி துறைவூரை சேர்ந்தவர் லிஜி ராஜேஷ்(40). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது . இந்நிலையில் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லிஜியின் தாயார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரைப் பார்க்க சனிக்கிழமை பிற்பகல் லிஜி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த லிஜியின் முன்னாள் நண்பரான ராஜேஷ் லிஜியுடன் வாக்குவாததத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கத்தியால் அவரை குத்தியுள்ளார் அங்கிருந்து லிஜி தப்பிக்க முயன்றதும் துரத்திச் சென்று அவரை 12 முறை கத்தியால் குத்தில் கொலை செய்துள்ளார்.
வாக்குமூலம்
இந்நிலையில் மருத்துவ ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் மகேஷ் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் "பள்ளிப்பருவம் முதல் லிஜியும் மகேஷும் பழகி வந்ததாகவும், பின்னர் லிஜி வேறொருவரை திருமணம் செய்து தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால்தான் கொலை செய்தேன் என்று மகேஷ் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.