பெண் குழந்தைக்கு தாயான பிரபல சீரியல் நடிகை.! குவியும் வாழ்த்துக்கள் !
பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் ரசிகர்கள் அவர்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக். நடிகர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் போதிய வாய்ப்பின்மையால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். ‘கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, ராஜா ராணி என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், இதுவரை 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ஒளிப்பதிவாளர் அசோக் சின்தலாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்.

இதனால் சீரியல்களில் நடிக்காமல் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு ரசிகர்களிடம் அப்டேட் கொடுத்து வந்தார். இந்த நிலையில், தற்போது தனக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாகவும் ஸ்ரீதேவி அசோக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் குவித்துவருகின்றனர்.