மறுப்பு தெரிவித்த காதலன் - 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
காதலன் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டார்.
காதலன் மறுப்பு
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா. இவர் வேப்பேரி பகுதியை சேர்ந்த தர்ஷன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளியான அந்த பெண்ணுக்கும், தர்ஷனுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
காதலி தற்கொலை
இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது ஹர்ஷிதாவை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஹர்சிதா 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின் காதலன் தர்ஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.