பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான கிரிராஜ் சிங்கின் சர்ச்சைகளும், அரசியலும்!
1952ல் பீகார் மாநிலம் பரஹியா லக்கிசராய் மாவட்டத்தில் பிறந்தார் கிரிராஜ் சிங்.
கிரிராஜ் சிங்
பரஹியாவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார். பின்னர் 1971ம் ஆண்டு மகத் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தார். இவரது மனைவி உமா சின்ஹா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2002 முதல் அரசியலில் பாஜக நிர்வாகியாக இருக்கிறார். அந்த வருடம் நடந்த தேர்தலில் பீகார் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங் பீகார் அரசாங்கத்தில் 2005 முதல் 2010 வரை கூட்டுறவு அமைச்சராகவும், 2010 முதல் 2013 வரை கால்நடை பராமரிப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். தொடக்கத்தில் இருந்தே அவர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். ஜேடியு-பாஜக கூட்டணியை உடைத்ததன் விளைவாக நிதிஷ் குமாரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பதினொரு பாஜக அமைச்சர்களில் அவரும் ஒருவர்.
பாஜகவில் தீவிரம்
அதன்பின், 2014ல் 16வது லோக்சபாவுக்கு நவதா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்ஜேடி வேட்பாளர் ராஜ் பல்லப் பிரசாத்தை 2,50,091 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள் குறித்த கூட்டுக் குழுவின் உறுப்பினரானார். மேலும், தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சராக அமர்த்தப்பட்டார். இதற்கிடையில், மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சம எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என கூறியிருந்தார்.
மக்கள் தொகை சர்ச்சை
பின்னர் அக்டோபர் மாதம் ஹிந்துக்கள் அதிக குழந்தை பெற்றுக் கொளள வேண்டும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். அதனையடுத்து, மே 2019 இல், 2019 பெகுசாரை தொகுதியில் போட்டியிட்டு, CPI வேட்பாளர் கன்ஹையா குமாரைத் 5,00000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கேபினட் அமைச்சரானார்.
ஜூலை 2021 இல், நரேந்திர சிங் தோமருக்குப் பதிலாக அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, இரண்டாவது மோடி அமைச்சகத்தில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் ஆனார். இந்நிலையில் சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாஜக தலைமையிலான மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
ஊரக வேலைத் திட்டம்
மேலும், இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ள ஊரக வேலைத் திட்டம் மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சாடியிருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 33,000 கோடியைத் தாண்டவில்லை என்றும், பெரும்பாலான நிதி ஆண்டுகளில், கிராமப்புற வேலைத் திட்டத்தை மோசமாகச் செயல்படுத்தியதால் அந்த நிதியிலும் குறிப்பிட்டத் தொகை திரும்பி வந்தது.
பிரதமர் மோடி பொறுப்பேற்ற மே 2014 முதல், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் மதிப்பீட்டை விட திருத்தப்பட்ட மதிப்பீடு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் ரூ.73,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு எனவும், ஆனால் அதன் செலவு ஏற்கெனவே ரூ.89,400 கோடியைத் தொட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சொத்து உருவாக்கத்தை சரிபார்த்து விவாதிக்க வருமாறு ராகுல் காந்திக்கு அமைச்சர் சிங் சவால் விடுத்தார்.
உறுதி
தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பிறகும், பிரதமர் பதவி பாஜக தலைவர் நரேந்திர மோடியிடம் இருக்கும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு புதிய உயரங்களை எட்டுகிறது
எல்லோரும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். 2024 ஆம் ஆண்டிற்கான பிரதமர் பதவி காலியாக இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என உறுதியாக தெரிவித்து வருகிறார்.