வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

DMK Ginjee Mastan Expat tamils
By mohanelango May 09, 2021 12:32 PM GMT
Report

வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழக அரசை அணுகுவதற்காக, தொடர்பு எண் ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் அந்த துறை ஏற்படுத்தப்பட்டு, அதன் அமைச்சராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைச்சகம் தன் பணிகளை தொடங்கியுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், தமிழக அரசை தொடர்புகொள்ளும் வகையில் தொடர்பு எண் ஏற்படுத்துவதுடன், அதனை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து விரைவில் ஆலோசனை கூட்டமும் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே அமைச்சர் மஸ்தான் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அமைப்பினருடன் காணொலி மூலம் ஆலோசனையும் மேற்கொண்டார். அவர்கள் கொரோனா தடுப்புப்பணிகளுக்கு பொருட்களை வழங்க முன் வந்துள்ளனர்.

விரைவில் அனைத்து நாட்டைச்சேர்ந்த தமிழர்களுடனும் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தமிழ் அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் மஸ்தான், அதுபற்றி ட்விட்டரில், 'நிறைய ஆக்கபூர்வமான செயல்களை வெளிநாடு வாழ் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவது சம்மந்தமாக பகிர்ந்து கொண்டோம். வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதனை அவர்களிடம் தெரிவித்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.