குழந்தையை தாக்கிய தாய்..சிக்கிய கள்ளக்காதலன் - அதிலும் ஓர் மோசடி..!
செஞ்சி அருகே கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தையை தாக்கிய விவகாரத்தில் அவரது கள்ளக்காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் , இவரது கணவன் துளசியை சித்தூருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
அப்போது துளசியின் செல்பேசியை பார்த்த போது, அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை பார்த்த வடிவழகன் காவல்துறையில் மனைவி துளசி மீது புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்த குழந்தையை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்த துளசியை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு சி்றையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் பிரேம்குமார் மீதான ஆத்திரத்தில் குழந்தையை அடித்ததாக திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து கள்ளக்காதலனை தேடி தனிப்படை போலீசார் ஒன்று விரைந்தனர். இந்நிலையில் போலீசாரின் தீவிர சோதனையில் அறந்தாங்கியில் உள்ள தனது சித்தியின் மகன் வீட்டில் இருந்த மணிகண்டன் என்பவர் சிக்கினார்.
இவர்தான் பிரேம்குமார் என கூறியே துளசியிடம் பேசியுள்ளார் என்பது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் கைது செய்யப்பட்டு விழுப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.