கிணற்றில் சடலமாக கிடந்த பெண் சிசு - தூக்கி வீசி சென்ற கொடூர தாய்?
dead body
born baby
By Anupriyamkumaresan
விழுப்புரம் அருகே கிணற்றில் மிதந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகே செஞ்சி அடுத்த புதூசொரத்தூர் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு சடலமாக மிதந்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு, குழந்தையை வீசி சென்றது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.