வார்னே அனுப்பிய கடைசி மெசெஜ் - கண் கலங்கிய கில்கிறிஸ்ட் : அப்படி என்ன சொன்னார்?

shanewarne adamgilchrist AUSvIND
By Petchi Avudaiappan Mar 11, 2022 12:00 PM GMT
Report

மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே  தனக்கு அனுப்பிய மெசெஜ் குறித்து கில்கிறிஸ்ட் கண் கலங்கியபடி கருத்து தெரிவித்துள்ளார். 


முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரது கிரிக்கெட் பயணம் குறித்த பல தகவல்களும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்களும் வார்னேவுடனான நட்பு குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட் வார்னே தனக்கு கடைசியாக அனுப்பிய மெசெஜ் குறித்து பேசியுள்ளார். 

அதில் ஷேன் வார்ன் இறப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக எனக்கு போன் மூலம் மெசேஜ் செய்திருந்தார். அதில் அன்று உயிரிழந்த ராட் மார்சுக்கு செலுத்தப்பட்ட இறுதி அஞ்சலி குறித்து குறிப்பிட்டிந்தார். அந்த மெசேஜை நான் ஒருபோதும் டெலிட் செய்ய மாட்டேன் என கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.