Wow... காற்றில் அசந்த ராட்சத சிங்கத்தின் பட்டுப்போன்ற முடி... - 4 மில்லியனை கடந்து குவியும் லைக்குகள்...!
ராட்சத சிங்கத்தின் காற்றில் அசந்த பட்டுப்போன்ற முடியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காற்றில் அசந்த சிங்கத்தின் முடி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வைரல் வீடியோவில் ராட்சத சிங்கம் அதன் பட்டுப்போன்ற முடியை வெளிப்படுத்துகிறது, கிழக்கு ஆபிரிக்கா, கென்யாவில் உள்ள மசாய் மாராவில் ஒரு ராட்சத ஆண் சிங்கம், தன்னுடைய பிரம்மாண்டமாக அழகு மேனியுடன் இருக்கிறது. ஆண் சிங்கத்தின் மேனி, அதன் முகத்தைச் சுற்றியிருக்கும் ரோமம், காற்றில் அழகாக அசைகிறது.
இளம் வெயிலில் சிங்கத்தின் இந்த இயற்கையான அழகு காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதன் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே அதிகப்படியான லைக்குகளை பெற்றுள்ளது. சுமார் 4.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

The king in Masai Mara National Reserve, Kenya pic.twitter.com/OSR7rswdxw
— Gabriele Corno (@Gabriele_Corno) December 27, 2022