பூமியை நோக்கி வரும் ராட்சத எரிகல்.. ஆபத்தை ஏற்படுத்துமா!

earth gianteric
By Irumporai Jul 21, 2021 03:57 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

இதுவரை பூமியை 11 லட்ச விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பூமி மீது விழும் விண்கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமியை நோக்கி வரும்பொழுது காற்று உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்துகொண்டே வரும்அதனால் இந்த கற்கள் பூமியை வந்தடைவதற்குள் சாம்பலாகிவிடும்.

சில கற்கள் எரிந்த நிலையிலேயே பூமி மீது விழும்.இந்த நிலையில் பூமியை நோக்கி விளையாட்டு மைதானம் அளவில் இருக்கக்கூடிய ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாகவும்இது பூமியை நோக்கி வருகிற 24 ஆம் தேதி அருகில் வரக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த விண்கல்லிற்கு 2008 ஜி.ஓ. 20 என்று பெயரிட்டுள்ளனர். இருந்தபோதிலும், இந்த விண்கல்லால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.