குலாம் நபி ஆசாத்: காங்கிரஸ் மீதான பற்றுதலும், விரக்தியும் ஓர் அலசல்!
குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆவார்.
குடும்பம்
இவர் 1949ஆம் ஆண்டு தோடா மாவட்டம், சோட்டி கிராமத்தில் ரஹமத்துல்லா-பாஷா பேகம் தம்பதியின் மகனாக பிறந்தார். குலாம் நபி ஆசாத் உள்ளூர் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார், அதன் பிறகு, அவர் பி.எஸ்சி. G.G.M அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, ஆசாத் 1972 ஆம் ஆண்டு காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ஷமீம் தேவ் ஆசாத் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சதாம் நபி ஆசாத் எனும் மகனும் மற்றும் சோபியா நபி ஆசாத் எனும் மகளும் உள்ளனர். இந்தியாவில் மாநிலஅளவில் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்.'
அரசியல்
இவர் முதல் முறையாக 1973 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பாலெசா பகுதி செயலாளராக அரசியல் அரங்கில் நுழைந்தார். இவர் காங்கிரஸில் கடும் முயற்சியால் பல்வேறு பதவிகளை பெற்று இளைஞர் அணி தலைவராக பதவியேற்றார். 1980ல் மகாராஷ்டிராவின் வாஷிம் தொகுதியில் இருந்து ஜேஎன்பி-ன் பிரதாப்சிங் ராம்சிங்-ஐ தோற்கடித்து தனது முதல் பாராளுமன்ற வெற்றியை பதிவு செய்தார்.
மேலும் பொதுத்துறை செயற்பாடுகள் குழுவின் உறுப்பினர், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார். 1982ஆம் ஆண்டு மத்திய சட்டத்தில் நீதித்துறை மற்றும் கம்பெனி விவகாரத்துறை மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 1983ல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பணியாயற்றினர். இரண்டாவது முறையாக 1985ல் லோக்சபாவில் எட்டாவது உறுப்பினரானார்.
எதிர்கட்சி தலைவர்
தொடர்ந்து 1886ல் மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணை அமைச்சரக பணியாற்றினார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பின் 1990ல் இராஜ்யசபா உறுப்பினரானார். 1991ல் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரானார். அதைத்தொடர்ந்து 1993ல் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை, விமானத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரானார். 1996ல் மீண்டும் இரண்டாவது முறையாக ராஜ்யசபாவிற்கு தேர்வானார்.
1998, 1999 மற்றும் 2000 வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். மூன்றாவது முறையாக 2002ல் ராஜ்யசபாவிற்கு தேர்வானார். 2004ல் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக 2005 வரை பணியாற்றியுள்ளார்.
காங்கிரஸில் விலகல்
பின்னர் ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார். 2006ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மூலம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மாநிலளவில் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 29436 வாக்குகள் வித்தியாசத்தில் தயா கிருஷ்ணனை தோற்கடித்து, படெர்வாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு மீண்டும் 2008ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்காவது முறையாக 2009ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாத்,
பின்னர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014 கூடுதல் பொறுப்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரராகவும் மற்றும் ராஜ்யசபாவில் எதிர்கட்சி தலைவரானார். ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 2015 ஆம் ஆண்டு ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 2022 இல், ஜம்மு மற்றும் காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.
தனிக்கட்சி
ஆசாத்தின் ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். ஆகஸ்ட் 26 அன்று கட்சியின் முதன்மை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ராகுல் காந்தியின் ஆலோசனை செயல்முறையை அழித்தது ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செப்டம்பர் 4, 2022 அன்று, காங்கிரஸில் ராஜினாமா செய்த பிறகு ஜனநாயக ஆசாத் கட்சி 'Democratic Azad Party என புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார். மேலும் நீலம்-வெள்ளை- மஞ்சள் நிறத்திலான கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார்.
விருது
இதற்கிடையில் 'ஆசாத்' என்ற பெயரில் தனது சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, 2022ல் பொது விவகாரத் துறையில் இந்திய அரசாங்கத்தால் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.