என் உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது…எனக்கு 6 நாட்களாக தூக்கமில்லை - குலாம் நபி ஆசாத் உருக்கம்
குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்தான் குலாம்நபி ஆசாத். இவர் காஷ்மீரின் மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார்.
கட்சியிலிருந்து விலகல்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான குலாம் நபி ஆசாத் அண்மைக் காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். இவர் காங்கிரசில் உட்கட்சி சீர்திருத்தம் தேவை என்று குரல் கொடுத்த அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய குழுவை சேர்ந்தவர். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கடந்த 26-ந் தேதி குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகினார்.
அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கெனவே மூத்த தலைவர்களான கபில் சிபில் உள்ளிட்ட பலர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், இவரது விலகலும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

குலாம் நபி ஆசாத் உருக்கம்
இந்நிலையில், தனது உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், காங்கிரசை சரி செய்ய கட்சி தலைமைக்கு நேரமே கிடையாது. கட்சியின் அடித்தளம் பலவீனமாகிபோய்விட்டது. எந்த நேரத்திலும் கட்சி வீழ்ச்சி அடையும். இதனால், நானும், வேறு சில தலைவர்களும் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தோம். என் உடம்பில் காங்கிரஸ் ரத்தம் ஓடுவதால், 6 நாட்களாக தூங்கவில்லை என்றார்.