பத்து நாட்களில் 13 பேய் படம் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் பரிசு - வினோத போட்டி

Competition Ghost Movie One Lakh Prizes
By Thahir Sep 14, 2021 06:58 AM GMT
Report

பூட்டப்பட்ட தனி அறையில் இருந்து 10 நாட்களில் 13 பேய் படம் பார்ப்பவருக்கு 95,000 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என அமெரிக்க ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியாகிய திகில் திரைப்படம் தான் மாயா. இந்த திரைப்படம் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவர்களால் இயற்றப்பட்டது.

பத்து நாட்களில் 13 பேய் படம் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் பரிசு - வினோத போட்டி | Ghost Movie One Lakh Prizes Competition

இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அந்த படத்தில் இறுதிக் கட்டத்தில் பணத்திற்க்காக ஒரு பேய் படம் பார்ப்பதற்காக சென்றிருப்பார்.

அதே போல தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஒரு பைனான்ஸ் நிறுவனம் ஒன்று பத்து நாட்களில் பூட்டப்பட்ட தனியறையில் அமர்ந்து 13 பேய் படங்கள் பார்ப்பதற்கு இந்திய மதிப்பில் 95 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த போட்டியை நடத்தும் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பைனான்ஸ் நிறுவனம் இந்த போட்டிக்கு ஹாரர் மூவி ஹாட் ரேஷனலிஸ்ட் என்று பெயர் வைத்துள்ளது.

அதன்படி இந்த படத்தை பார்க்க கூடிய நபர்களுக்கு அதிக அளவில் அச்சத்தை ஏற்படுத்த கூடிய பயங்கரமான 13 பேய் படங்கள் தேர்வு செய்யப்பட்டு, பார்க்க வைக்கப்படும்.

பத்து நாட்களில் 13 பேய் படம் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் பரிசு - வினோத போட்டி | Ghost Movie One Lakh Prizes Competition

கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர் தனியாக ஒரு அறையில் அமர்ந்து இந்த படத்தை தொடர்ச்சியாக 10 நாட்களுக்குள் பார்த்து முடிக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது அந்த நபரது உடலில் ஃபிட்பிட் எனும் இதயத்துடிப்பை கண்காணிக்கும் இயந்திரம் பொறுத்தப்படுமாம்.

இந்த போட்டி எதற்காக வைக்கப்படுகிறது? என உங்களுக்குள் கேள்வி உருவாகலாம். இதற்காக அந்தநிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட கூடிய பேய் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கூடிய பேய் படங்கள் இவை இரண்டிலும், எந்த மாதிரியான படங்கள் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தான் இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் அமெரிக்கர்களாக இருப்பதுடன், 18 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 13 படங்களையும் பத்து நாட்களில் பார்த்து முடிப்பவர்களுக்கு, 1300 டாலர் பரிசுத் தொகையாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.