வேலை நேரத்தில் உறக்கம் ..என்ன ஆளு யா நீ ? - பட்லரை கடுமையாக சாடிய ஆஸி .. ஜாம்பவான் !

ghilchrist buttler droppedcatches
By Irumporai Dec 17, 2021 07:47 AM GMT
Report

ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆசஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை எதிர்கொண்ட மார்கஸ் ஹாரீஸ் ஸ்கொயர் லெக்கில் தட்டிவிட்டார். ஆனால், இங்கிலாந்து கீப்பர் பட்லர் அந்தரத்தில் டைவ் அடித்து, அந்தப் பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து அனைவரையும் அசரவைத்தார். இதனால் ஏமாற்றத்துடன் ஹாரீஸ் பெவிலியன் திரும்பினார்.

ஒன்டவுன் வந்த லபுசேன், வார்னருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் உலகக்கோப்பையில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் வார்னர், ஆசஸ் தொடரிலும் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

95 ரன்கள் எடுத்த அவர், கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். கடைசி 5 இன்னிங்ஸில் அரைசதமடித்துள்ள வார்னர், சதத்தை மட்டும் பூர்த்தி செய்ய முடியவில்லை. மறுபுறம் நிதானமான ஆட்டத்தை ஆடிய லபுசேனுக்கு லக் அடித்துக் கொண்டே இருந்தது. மூன்று முறை கீப்பர் கேட்சில் இருந்து தப்பினார்

வேலை நேரத்தில் உறக்கம் ..என்ன ஆளு யா  நீ ?  - பட்லரை கடுமையாக சாடிய ஆஸி  .. ஜாம்பவான் ! | Ghilchrist Attacks Buttler For 2 Dropped Catches

டைவ் அடித்து சிறப்பான கேட்ச் பிடித்த பட்லர். லட்டு மாதிரி அழகாக கைக்கு வந்த இரண்டு கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற லபுசேனுக்கு மேலும் ஒரு முறை அதிர்ஷ்டம் அடித்தது. 3வது முறையாக ராபின்சன் பந்தில் எட்ஜாகி பட்லரிடம் கேட்சானார் லபுசேன்.

இந்நிலையில், லபுசேனின் இரண்டு கேட்சுகளை விட்ட பட்லரை, ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிரிஸ்ட் விளாசியுள்ளார். அவர் ஆட்டத்தைக் கவனிக்காமல், மைதானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என சாடியுள்ளார். இதேபோல், முன்னாள் வீரர்கள் பலரும் பட்லரின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து வருகின்றனர்.