உடலின் இந்த இடத்தில் நெய் தடவினால் வெள்ளை முடி கறுப்பாக மாறுமாம்.. ஆச்சரிய தகவல்!
நெய்யை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நெய்
நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும் என்ற பயத்தில் நெய் சாப்பிடுவதை பலர் தவிர்த்து விடுவர். ஆனால் இதனால் பல நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
மூக்கடைப்பு இருக்கும் சமயத்தில் மூக்கின் மீது சிறிதளவு நெய்யை தடவுவது தொற்றிலிருந்து விரைவாக நிவாரணம் பெறுவதற்கு உதவும். இதில் காணப்படும் பியூட்ரிக் அமிலம் வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
நல்ல முன்னேற்றம்
எனவே, வீக்கம் மற்றும் காயங்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. நெய்யில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து திசுக்கள் மற்றும் மூட்டுகளில் லூப்ரிகன்ட் போல செயல்பட்டு வலியை குறைக்கிறது.
தினமும் நெய் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்பெறும். இது மலச்சிக்கல், வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. மேலும், தொப்புளில் நெய் தடவுவதால் கண்கள் மேம்படும்,
இளமையில் வளரும் வெள்ளை முடியும் கருப்பாக மாறத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிகப்படியான நெய் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. மிதமான அளவில் சாப்பிட்டால் மட்டுமே அதன் பலன்களை அடையமுடியும்.