நாற்காலில் அமர்ந்தவாறு உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Heart Attack
By Nandhini Oct 20, 2022 07:30 AM GMT
Report

நாற்காலில் அமர்ந்தவாறு உயிரிழந்த ஜிம் பயிற்சியாளரின் சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாற்காலில் அமர்ந்தவாறு உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்

காஜியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அடில் (33). இவர் ஒரு உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வந்துள்ளார். தினமும் உடற்பயிற்சி செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில், நாற்காலியில் அமர்ந்தவாறு நெஞ்சைப்பிடித்த அடிலை, அவரது உதவியாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

அடில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், ஆனால், ஜிம்மிற்கு செல்வதை அவர் நிறுத்தவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். அடிலுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், அவரின் இந்த திடீர் மரணம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Ghaziabad Gym Trainer-Dies-Heart Attack