இந்தியாவுக்குள் நுழைந்ததா குரங்கு அம்மை? - அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
உலக நாடுகளைக் கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை இதுவரை இந்தியாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
குரங்கு அம்மை
12 நாடுகளில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இதன் அச்சம் மக்களிடையே பரவலாக உள்ளது.
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில தினங்களுக்கு முன்பு அனைத்து விமான நிலையங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பொதுச் சுகாதாரத்துறை வெளியிட்டது.
இந்தியாவில் குரங்கு அம்மை
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 5 வயது குழந்தைக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
காசியபாத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி அந்த குழந்தையை காது கேளாதோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அப்போது குழந்தையின் உடம்பில் சொறி, அரிப்பு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அம்மாநில சுகாதரத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குழந்தையின் இல்லத்திற்கு சென்று குழந்தையின் மாதிரிகளை சேகரித்த சுகாதாரக் குழு அதனை புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
UP | Samples of a 5-yr-old girl collected for testing for #monkeypox, as a precautionary measure, as she had complaints of itching & rashes on her body. She has no other health issues & neither she nor any of her close contact travelled abroad in the past 1 month: CMO Ghaziabad
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 4, 2022
அந்த குழந்தைக்கு குரங்கு அம்மைக்கான லேசான அறிகுறிகள் இருந்ததால் புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வு முடிவுகள் வரும்வரை குழந்தையை தனிமைப்படுத்த அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.