இது காலத்தின் கட்டாயம் - கொண்டாட தயாராகுங்கள் - நிர்வாகிகளிடம் அண்ணாமலை பேச்சு
தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று பேசிய அண்ணாமலை கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டம்
நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் அந்த பக்கம் திரும்பி வருகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று(27-05-24) நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கொண்டாட தயாராகுங்கள்
இதில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், அண்ணாமலை நிர்வாகிகளிடத்தில் ஆற்றிய சிறப்புரையில்,
பிரதமர் கனவில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இருக்கிறார்கள். அது ஜூன் 4ம் தேதி வரை மட்டுமே. கடந்த தேர்தலில் விட அதிகமான தொகுதிகளை பெற்று 3வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி.
அது காலத்தின் கட்டாயம். ஆட்சி மீது எந்த குறையும் இல்லை. வெற்றியைக் கொண்டாட தயாராகுங்கள்.
தென்னிந்தியாவில் இம்முறை புதிய துவக்கமாக மட்டுமே அதிகமான இடங்களை பாஜக வெல்லும். வடக்கு, தெற்கு என்ற பேச்சு ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இருக்காது. அனைத்து பகுதிகளிலும் பாஜக அதிகமான இடங்களை வெல்லும் - ஜூன் 4-ஆம் தேதி அதனை பார்ப்பீர்கள்.