நீ கலெக்டர் ஆனா தான் முதலிரவு...கணவனின் நிபந்தனையால் அதிர்ந்து போன மனைவி
2 ஆண்டுகளுக்குள் ஐஏஎஸ் அதிகாரியானால்தான் நமக்குள் முதலிரவு நடக்கும் என்ற வினோதமான நிபந்தனையை விதித்த கணவனால் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
ஜாம்ஷெட்பூர் நகரில் கணவர் ஒருவர் தனது மனைவியிடம் முதலிரவில் தனக்குள் ஒரு நீண்டகால ஆசை இருந்ததாக தெரிவித்த சம்பவம் சூர்யவம்சம் திரைப்பட பாணியில் அரங்கேறியுள்ளது.
பொட்கா கிராமத்தில் வசிக்கும் பல்லவி என்பவர் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஜெய்மால் மண்டல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
எம்பிஏ பட்டம் பெற்ற ஜெய்மால் மண்டல் வங்கி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவியாக இருக்க ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் எனவும், 2 ஆண்டுகளுக்குள் ஐஏஎஸ் அதிகாரியானால்தான் நமக்குள் முதலிரவு நடக்கும் என்ற வினோதமான நிபந்தனையை தேனிலவு இரவில் தனது மனைவியிடம் முன்வைத்தார்.
முதலில் இதைக்கேட்ட பல்லவிக்கு சிரிப்பு வந்துள்ளது. மறுநாள் காலையில் தனக்கு நேர்காணல் இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்ற ஜெயமால் திரும்பி தன்னிடம் நெருங்கவில்லை.
ஒருமுறை கூட கணவர் தன்னை பெயர் சொல்லிக்கூட அழைக்கவில்லை என்றும், தான் பேச முயன்ற போதெல்லாம் மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கே இதை வெளியே சொன்னால் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படுமோ என்று எண்ணி எல்லோரிடமிருந்தும் பிரச்சனையை மறைத்துள்ளார்.
தொடர்ந்து, இதுபோலவே நாட்கள் நகர பொறுமையிழந்த அந்த பெண் தனது மாமியாரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நாளுக்கு நாள் மாமியார் கொடுமை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தனது வீட்டிற்கு சென்ற பல்லவி தனது தந்தையிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கிழக்கு சிங்பூமில் உள்ள பொட்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது, நீதிமன்றம் தனக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையில் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களை சுற்றி வருவதாக கூறப்படுகிறது.