‘‘நீதி கிடைச்சிடுச்சு ஆனால் நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை’’ - ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்

gerogefloyd justiceforgeorgefloyd
By Irumporai Apr 21, 2021 04:56 AM GMT
Report

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவ்வின் குற்றவாளி என அந் நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை காவல் அதிகாரி டெரிக் சாவ் என்பவர் விசாரணைக்கு அழைத்தார்.

அப்போது ஜார்ஜ் பிளாய்ட் விசாரணைக்கு காரில் ஏற மறுக்கவே ,ஜார்ஜ் பிளாய்ட்-ஐ கீழே தள்ளிய காவல் அதிகாரி டெரிக், அவரது கழுத்தில் நீண்ட நேரம் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு சில நிமிடங்களில் 45 வயதான ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்ஜ் பிளாய்ட் -ன் உயிரிழப்பு அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்களுக்கு வித்திட்டது. அதே சமயம் ஜார்ஜ் பிளாய்ட் ன் கொலைக்கு காரணமான டெரிக் சாவ்வின் உள்ளிட்ட 4 போலீசார் கைது செய்யப்பட்டதுடன் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு நேற்று மினசோட்டா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரனை முடிவில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், காவல் அதிகாரி டெரிக் சாவ்வின் குற்றவாளி என்று அறிவித்தது.நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இந்த தீர்ப்பு பலருக்கு கிடைத்த வெற்றி என்றும், இன்று நாம் மீண்டும் சுவாசிக்க முடிகிறது என்றும் ஜார்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்தினர் கூறி உள்ளனர். அதே சமயம் நீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், தற்போது  குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரி டெரிக் சாவ்வினுக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.