ஜெர்மனியுடன் மோதும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி:வெண்கலத்தை கைப்பற்றுமா இந்தியா?

GermanyvsIndia Mens Hockey
By Thahir Aug 03, 2021 03:12 PM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியுடன் விளையாடுவது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜெர்மனி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியுடன் மோதும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி:வெண்கலத்தை கைப்பற்றுமா இந்தியா? | Germany India Mens Hockey

வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காலை 07:00 மணி அளவில் நடைபெறுகின்ற இந்த போட்டியில், இரு அணிகளும் மோத உள்ளன.

ரியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி வெண்கல பதக்கம் வென்றிருந்தது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் கடைசியாக 1980-இல் நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது. இந்த முறை வென்றால் சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா பெறும்.