1236 டன்: தங்கத்தை திருப்பி கேட்கும் ஜேர்மனி? அமெரிக்கா என்ன செய்யும்?

United States of America Germany
By Fathima Jan 29, 2026 09:28 AM GMT
Report

உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜேர்மனி 2ம் இடத்தில் உள்ளது.

1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திய ஜேர்மனி, அதன் வெளிப்பாடாக தங்களது தங்க இருப்பை அமெரிக்காவில் வைத்தது.

அதாவது ஜேர்மனியின் தங்க இருப்பில் 37 சதவிகிதம் சுமார் 1236 டன் தங்கம் அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

1236 டன்: தங்கத்தை திருப்பி கேட்கும் ஜேர்மனி? அமெரிக்கா என்ன செய்யும்? | Germany Ask Gold From America

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் ஜேர்மனிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் பெடரல் வங்கியின் முன்னாள் ஆய்வுத்தலைவரான Emanuel Mönch, அமெரிக்காவில் நிலவிவரும் தற்போதைய சூழலால் அங்குள்ள நம் நாட்டின் தங்கத்தை தயாகம் கொண்டு வருவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டியும், தங்களது தங்க இருப்பை தாயகம் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளது.

எனவே இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை ஜேர்மனி எடுக்கலாம், 2024ம் ஆண்டின் நிலவரப்படி ஜேர்மனியின் மொத்த தங்க இருப்பு €450bn ஆகும்.

1236 டன்: தங்கத்தை திருப்பி கேட்கும் ஜேர்மனி? அமெரிக்கா என்ன செய்யும்? | Germany Ask Gold From America