இனி பொதுவெளியில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம் - விருப்பத்தை நிறைவேற்றிய அரசு!
நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலாடையின்றி குளியல்
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து, குறைத்தீர்ப்பாளர் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் பெர்லின் நகர அதிகாரிகளும் பாலின பாகுபாட்டினை ஒப்புக்கொண்டதோடு,
பெண்கள் விருப்பம்
இதன்பின் பெர்லின் நகரில் உள்ள குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் மேலாடையின்றி செல்ல உரிமை பெறுகின்றனர் எனக்கூறி உள்ளனர். அதோடு பெர்லின் நகரில் உள்ள பொதுக் குளங்களை நிர்வகித்து வரும் பெர்லினர் பேடர்பெட்ரீப், அதன் ஆடை விதிகளையும் மாற்றியுள்ளது.
இது தொடர்பாக குறைதீர்ப்பாளர் அலுவலகத் தலைவர் பேசுகையில், ஆண், பெண் அல்லது இந்த இரு பாலினம் அல்லாத அனைத்து பெர்லின் மக்களுக்கும் இந்த முடிவு சம உரிமையை வழங்குகிறது. சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். இந்தப் புதிய குளியல் விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது.