எனக்கு ஹிந்தி புரியாது பரவாயில்லை...இந்திய இளைஞரை திருமணம் செய்த ஜெர்மன் பெண்
காதலுக்கு மொழி இல்லை என்பார்கள்..அந்த வகையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இந்திய இளைஞர் காதலித்து இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் நவாடாவைச் சேர்ந்தவர் சத்யேந்திர குமார் இவர் ஸ்வீடனில் உள்ள தோல் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருடன் லாரிசா என்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த லாரிசா என்ற இளம் பெண்ணும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் கடந்த 2019 ஆண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சிறப்பு விசாவில் இந்தியா வந்த லாரிசா இந்திய முறைப்படி திருமணம் செய்து சத்யேந்திரா குமாரை திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து பேசிய மணப்பெண் லாரிசா இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள்,இந்தியாவின் கலாச்சாரத்தை அறிய ஆர்வமுடன் இருந்ததாக தெரிவித்தார்.
தனக்கு மொழி புரியவில்லை என்றாலும்,எனது கணவர் சத்யேந்திரா குமார் உதவி செய்கிறார் என்றார்.இந்த திருமண விழாவில் லாரிசாவின் பெற்றோர் விசா பிரச்சனை காரணமாக பங்கேற்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.