கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி : ஜெர்மனி அதிரடி முடிவு
கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஞ்சா பயன்பாடு
உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களில் முக்கியமான இடத்தில் இருப்பது கஞ்சா. இந்த கஞ்சா பயன்பாட்டிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகள் இதனை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன.

ஜெர்மனி
இந்நிலையில் தற்போது முதல்முறையாக கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024 க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பிட்ட வயதினை கடந்தோர் அதிகபட்சமாக 30 கிராம் அளவில் கஞ்சாவை பயன்படுத்தும் வகையில் இந்த சட்டம் இருக்கும் எனவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
அப்படி இந்த கஞ்சா பயன்பாடு ஜெர்மனியில் அனுமதிக்கப்பட்டால், கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு எனும் பெயரை ஜெர்மனி பெறும்.