இறந்தவர்கள் மீண்டும் உயிருடன்..நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு - அதெப்படி?
உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் மீண்டும்..
ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ ஆச்சர்ய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்த பிறகு அவர்களின் உடல்களைப் பாதுகாப்பதாக அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தோர் உடலை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் முழு உடல் கிரையோப்ரிசர்வேஷனை வழங்குகிறது. இது செல் சேதம் மற்றும் சிதைவைத் தடுக்க உதவுகிறது. எதிர்கால மருத்துவ வளர்ச்சியால் ஒரு நாள் இந்த உடல்களுக்கு மீண்டும் உயிர் தர முடியும் என்று நம்புகின்றனர்.
இதுவரை, 650க்கும் மேற்பட்டோர் இந்த சேவைக்குப் பதிவுசெய்துள்ளனர். இதுவரை அந்த நிறுவனம் 3 அல்லது 4 பேரின் உடல்களைப் பராமரித்து வருகிறது. 5 செல்ல பிராணிகளின் உடல்களையும் பராமரித்து வருகிறது.
புதிய திட்டம்
700க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்காக $200,000 (ரூ.1.74 கோடி) கட்டணமாக வசூலிக்கவுள்ளனர். விரைவில் அமெரிக்காவிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆய்வாளர்கள், இதுவரை கிரையோபிரசர்வேஷனுக்குப் பிறகு யாரும் வெற்றிகரமாக உயிர் பெறவில்லை. ஒருவேலை அவர்கள் உயிர் பெற்றாலும் கூட, அவர்களுக்கு மூளை கடுமையாகச் சேதமடைந்தே இருக்கும் என்கிறார்கள்.