மோடியிடமிருந்து இந்தியாவை காப்பாற்றுவேன் : சர்ச்சையில் சிக்கிய உலகப் பணக்காரர்
ஹங்கேரிய அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்ஜ் சோரஸ்
இன்று சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாக உள்ள ஜார்ஜ் சோரஸ் என்ன கூறினார் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மோடி குறித்த சர்ச்சை
அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ள கருத்தின்படி அதானியின் வணிக சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை உலுக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜார்ஜ் சோரஸ்.

இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்றும் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை நான் உருவாக்குவேன். மோடியின் பிடியில் உள்ள இந்திய அரசை விடுவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
பாஜக அரசு கண்டனம்
அவரது இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் ஜார்ஜ் சோரஸ் குற்றம் சாட்டவில்லை என்றும், இந்திய ஜனநாயக அமைப்பையும் அவர் குறைகூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ஜனநாயக முறையை அழிக்கும் நோக்கில் அவர் 100 பில்லியன் டாலர் நிதியை உருவாக்கி இருப்பதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் ஜனநாயகத்தை அழித்துவிட்டு, ஆட்சியில் தங்களுக்கு சாதகமான நபர்களை அமர வைக்கும் நோக்கில் ஜார்ஜ் சோரஸ் செயல்படுவதாகவும், இதற்கு கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றைக் குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.
92 வயதான ஜார்ஜ் சோரஸ் உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார் ,அதோடு அரசியல் குறித்த ஆர்வமுடையவராகவும் அறியப்படுகின்றார் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை ஆதரித்தார்.
ஹிலாரி, ஜோ பைடனையும் அவர் ஆதரித்தார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது பிரதமர் மோடியின் செயல்பாடுகளை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ளதுதான் பேசுபொருளாகியுள்ளது.