Wednesday, Feb 19, 2025

தோனி ரூமில் எப்பவும் அது இருக்கும்; இளம் வீரர்கள் அங்கதான் இருப்பாங்க - போட்டுடைத்த ஜார்ஜ் பெய்லி!

MS Dhoni Cricket Indian Cricket Team Sports
By Jiyath a year ago
Report

எம்எஸ் தோனி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் ஜார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தோனி ரூமில் எப்பவும் அது இருக்கும்; இளம் வீரர்கள் அங்கதான் இருப்பாங்க - போட்டுடைத்த ஜார்ஜ் பெய்லி! | George Bailey Reveals Ms Dhoni Hookah Habit

இந்நிலையில் தோனி ஹூக்காபுகைக்கும் வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் அவரின் சில ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தோனி குறித்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் ஜார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது "தோனிக்கு சீசா மற்றும் ஹூக்கா முறையில் புகை பிடிப்பது மிகவும் பிடிக்கும். இந்த புகையை பிடிப்பதற்காக அவர் அறையிலேயே இதற்கான செட் அப்பை உருவாக்கி வைத்திருந்தார்.

பார்ட்டியில் ஹுக்கா புகைத்து தள்ளிய எம்எஸ் தோனி; அதிர்ச்சியில் ரசிகர்கள் - வைரல் Video!

பார்ட்டியில் ஹுக்கா புகைத்து தள்ளிய எம்எஸ் தோனி; அதிர்ச்சியில் ரசிகர்கள் - வைரல் Video!

ஜார்ஜ் பெய்லி

அவருடைய ஹூக்காவை யார் வேண்டுமானாலும் அவருடைய அறைக்கு வந்து பயன்படுத்தலாம். தோனியின் அறைக்கு எப்போதும் யார் வேண்டுமானாலும் செல்லலாம்.

தோனி ரூமில் எப்பவும் அது இருக்கும்; இளம் வீரர்கள் அங்கதான் இருப்பாங்க - போட்டுடைத்த ஜார்ஜ் பெய்லி! | George Bailey Reveals Ms Dhoni Hookah Habit

இதனாலே தோனியின் அறையில் பல இளம் வீரர்கள் இருப்பார்கள். இந்தியா உள்ளிட்ட மற்ற கிரிக்கெட் அணியில் சீனியர்கள் மட்டும்தான் இவ்வாறு புகையைப் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் பாகுபாடை உடைத்தவர் தோனி தான்.

இளம் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தோனியின் அறைக்கு சென்று போட்டியில் என்னென்ன நடந்தது என்பது குறித்து பேசுவார்கள். இதன் மூலம் தோனி அனைவருக்கும் இடையே உள்ள மனச்சுவரை உடைத்து எறிந்தார்" என்று ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.