இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா : பின்னணியில் அமெரிக்கா ?

Shavendra Silva
By Irumporai May 26, 2022 10:46 AM GMT
Report

இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விகம் லியனகே ஜூன் 1-ம் தேதி பொறுப்பேற்கிறார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாகயும் பணியாற்றினார்.

இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் படைகளின் தலைமையதிகாரியாக பதவியேற்றார்.

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா  : பின்னணியில்  அமெரிக்கா ? | General Shavendra Silva To Stepdown Commander

இந்தநிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் அவர் இலங்கையின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்படவுள்ளார். ராணுவ தளபதி சுவேந்திர சில்வா மே 31-ம் தேதி பதவியை விட்டு விலகுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் கடந்த 15-ம் தேதி கூறியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கோட்டாபயவின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவினை எடுத்துள்ளது தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது