அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : ஓபிஎஸ் திட்டம் இதுதான் ? பரபரப்பில் தொண்டர்கள்
ADMK
Edappadi K. Palaniswami
By Irumporai
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்று விரிவாக விளக்க அளிப்பேன் , ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது , இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி தாக்கல் செய்ய உள்ளார் , இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த கேள்வியினை செய்தியாளர்கள் நேற்று கேட்டனர்.

எதுவும் கூறவில்லை
அதற்கு பதில் கூறிய ஓபிஎஸ் தற்போது எதுவும் கூற விரும்பவில்லை. நாளை (இன்று) விரிவான விளக்கம் தருகிறேன் என கூறி சென்றார், இன்று ஓபிஎஸ் கூறப்போவது என்ன என்பது குறித்து அவரது தரப்பினர் ஆவலுடன் உள்ளனர்.