Saturday, Apr 5, 2025

மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பொதுத்தேர்வு

vaccination student exam
By Irumporai 4 years ago
Irumporai

Irumporai

in கல்வி
Report

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தின் அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளிக்கவுள்ளார்.

பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள்,மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள் என பல தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன.

இதில்  திமுக கூட்டணி உட்பட பெரும்பான்மையான கட்சிகள் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என கூறியது.

பாஜக, பாமக, சி.பி.ஐ., சி.பி.எம்.உள்ளிட்ட கட்சிகள் தேர்வு நடத்த வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்தலாம் என  தமிழ்நாடு அரசு பரிசீலித்துவருகிறது.

ஆகவே  அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு  வரும் 20 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.