பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தா? பள்ளிக்கல்வி செயலாளர் திடீர் ஆலோசனை!

education school student exam
By Jon Apr 08, 2021 04:55 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தேர்தலுக்கு பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை விதிமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து ஹோட்டல்கள், திருமண விழாக்கள், துக்க நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மே 3ம் தேதி முதல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பெரும் பாதிப்பு ஏற்படும்.

  பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தா? பள்ளிக்கல்வி செயலாளர் திடீர் ஆலோசனை! | General Election Canceled School Education Advice

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மே 3ம் தேதி திட்டமிட்டபடி நடத்தலாமா? என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இக்கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா பாதிப்பை காரணம் காட்டி 9,10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.