தளபதி பட பாடலுக்கு உடைந்த கையோடு நடனம் ஆடிய ஜெனிலியா.

song flim music thalapathi65 Genelia
By Jon Mar 15, 2021 02:18 PM GMT
Report

தளபதி பட பாடலுக்கு உடைந்த கையோடு ஜெனிலியா ஆடிய நடனம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது.

மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் ”இது உங்களுக்காக விஜய்... உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடுகிறோம்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.