பாலின ஏற்றத்தாழ்வு குறியீடு; ரொம்ப மோசம் - இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

Norway New Zealand India Sweden Iceland
By Sumathi Jun 14, 2024 07:13 AM GMT
Report

 பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியா பிடித்துள்ள இடம் குறித்து பார்ப்போம்.

 பாலின ஏற்றத்தாழ்வு

உலகப் பொருளாதார அமைப்பு ஆண்டுதோறும் பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில், பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து வெளியிட்டு வருகிறது.

பாலின ஏற்றத்தாழ்வு குறியீடு; ரொம்ப மோசம் - இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா? | Gender Inequality Index India Ranked 129Th

அதன்படி, இந்த ஆண்டும் 146 நாடுகளைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐஸ்லாந்து முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக பின்லாந்து, நாா்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

மாற்று பாலின அறுவை சிகிச்சை - இது மருத்துவ தொழிலின் தவறான நடத்தை!

மாற்று பாலின அறுவை சிகிச்சை - இது மருத்துவ தொழிலின் தவறான நடத்தை!


இந்தியா?

இந்த நாடுகளிலெல்லாம் பாலின ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு 127-வது இடத்தை பிடித்த இந்தியா, இரண்டு இடங்கள் சரிந்து 129-ஆவது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூடான் நாடுகள் இந்தியாவை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளன.

gender inequality

பாகிஸ்தான் 145வது இடத்திலும், சூடான் கடைசி இடத்திலும் உள்ளன. ஆண், பெண் சமத்துவ பாலின நிலையை முழுமையாக எட்ட இன்னும் 134 ஆண்டுகள் (5 தலைமுறைகள்) ஆகும். எந்த நாட்டிலும் 100 சதவிகித பாலின சமத்துவம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.