“ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே முடியலையாம்..ஆனா ?” - மணமகனை வெளுத்தெடுத்த பெண் வீட்டார்

groom cheating gaziyabadh sahibabadh being attacked by bride family
By Swetha Subash Dec 19, 2021 10:45 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள சாஹிபாபாத்தில் நடைபெற இருந்த திருமண விழாவில் மணமகனையும் அவரது குடும்பத்தாரையும் பெண் வீட்டார் தாக்கிய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஆக்ராவைச் சேர்ந்த முஜமில் ஹுசைன் என்பவரின் திருமணம் நேற்று நடைபெற இருந்தது.

அப்போது மணமகனும் அவரது தந்தை 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது பெண் வீட்டாரை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முஜாமி ஹுசைனுக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆனது தெரியவந்துள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மணமகனை அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக மணமகள் குடும்பத்தார் போலிஸிடம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக வரதட்சணை கேட்ட மணமகனை பெண் வீட்டார் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.