ஐபிஎல் தொடரில் சிக்சரில் சாதனைப் படைத்த கிறிஸ் கெயில்

gayle ipl2021 universalboss iplfans pbks
By Praveen Apr 14, 2021 02:33 PM GMT
Report

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் விளாசியதன் மூலம் புதிய மைல்கல்லை கிறிஸ் கெயில் எட்டி உள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் 7-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசிய நிலையில் 3-வது பந்தை அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சிக்சருக்கு விரட்டிய போது அவரின் ஒட்டுமொத்த சிக்சர் கணக்கு 350 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய ஒரே வீரர் என்ற தனிச் சிறப்புக்கு கெயில் உரியவர் ஆனார். வேறு எந்த வீரரும் ஐ.பி.எல். போட்டியில் 250 சிக்சர்களையே தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.